தெய்வத் திருமணங்கள் பலவும் நடந்தேறிய மாதம் பங்குனி. தமிழகத்தில் இன்றும் ஒரு சிலர் மத்தியில் பங்குனியில் திருமணம் நடத்தலாமா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஜோதிட ரீதியாக இதற்கு விடை காண முற்பட்டால் பங்குனி மாதத்தில் தாராளமாக திருமணம் நடத்தலாம் என்பதே அனைத்து ஜோதிடர்களின் பதிலாக இருக்கிறது. பிறகு ஏன் இந்த சந்தேகம்..? யோசித்துப் பார்த்தால் காரணமில்லாமல் இந்த கேள்வி எழவில்லை. தமிழகத்தின் புகழ்பெற்ற பல ஆலயங்களிலும் சைவ, வைணவ பேதமின்றி பங்குனி உத்திரத்தை மையமாகக் கொண்டு பிரம்மோற்சவம் நடப்பது வழக்கம்.
No comments:
Post a Comment